சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 72.
தொற்று உறுதியானதை அடுத்து அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
ரகோத்தமன் 1968 ஆம் ஆண்டு சிபிஐயில் உதவி ஆய்வாளராக பணியை தொடங்கியவர். பின்னர் சிபிஐயில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார்.

