பொன்முடி: புதிய கல்விக் கொள்கைக்கு இடம் இல்லை

பொன்முடி: புதிய கல்விக் கொள்கைக்கு இடம் இல்லை

1 mins read
fdc173e9-5e63-4993-a6e2-b78afe356876
-

சென்னை: தமி­ழக உயர் கல்­வித்­துறை மாநில உரி­மை­களை பாது­காக்­கும் வகை­யில் செயல்­படும் என்று அத்­து­றை­யின் அமைச்­சர் பொன்­முடி தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அர­சின் புதிய கல்­விக்­கொள்கை நிச்­ச­ய­மாக தமிழ்­நாட்­டில் நுழைய முடி­யாது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"புதிய கல்­விக்­கொள்­கை­யைப் பற்றி பல­முறை பேசி இருக்­கி­றேன். ஏற்­கெ­னவே இது தொடர்­பாக தமி­ழக முதல்­வ­ரும் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

"இப்­போது உயர்­கல்­வித்­துறை செய­லா­ள­ரும் புதிய கல்­விக்­கொள்­கை­யில் இருக்­கக்­கூ­டிய குறை­களை பற்றி ஓர் அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றார்.

"அதை எல்­லாம் முழு­மை­யாக ஆய்வு செய்து நிச்­ச­ய­மாக மாநில உரி­மை­களை பாது­காக்­கின்ற வகை­யில் திமுக அரசு செயல்­படும்.

"புதிய கல்­விக் கொள்கை நிச்­ச­ய­மாக தமிழ்­நாட்­டில் நுழைய முடி­யாது என்­கிற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கிறது," என்று நேற்று முன்தினம் சட்­டப்­பே­ரவை­யில் பேசிய­போது அமைச்­சர் பொன்­முடி தெரி­வித்­தார்.