ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது

1 mins read
5431a2f6-6604-4542-b177-95fbf12e71ee
-

தூத்­துக்­குடி: கொவிட்-19 இரண்­டா­வது அலை­யால் தொற்று அதி­வே­க­மா­கப் பரவி வரு­கிறது. ஆக்­சி­ஜன் பற்­றாக்­கு­றை­யால் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்­சை­ய­ளிக்க முடி­யா­மல் தமி­ழ­கம் உள்­ளிட்ட பல மாநி­லங்­கள் மூச்­சுத் திண­ற­லுக்கு ஆளா­கி­யுள்­ளன. பல மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­கள் ஆக்­சி­ஜன் கிடைக்­கா­மல் உயி­ரி­ழக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து ஸ்டெர்­லைட் ஆலை­யில் ஆக்­சி­ஜன் உற்­பத்தி செய்­வ­தற்கு உச்ச நீதி­மன்­றம் அனு­மதி அளித்தது. அதன்­பே­ரில் தமி­ழக அர­சும் அதற்கு அனு­மதி அளித்து உத்தரவிட்டது. இதனை கண்­கா­ணிக்க மாவட்ட ஆட்­சி­யர் கி. செந்­தில்­ராஜ் தலை­மை­யி­லான 9 பேர் கொண்ட கண்­கா­ணிப்­புக் குழு­வும் அமைக்­கப்­பட்­டது. இந்­நிலை­யில் ஸ்டெர்­லைட் ஆலை­யில் புதன்­கி­ழமை இர­வில் ஆக்­சி­ஜன் உற்­பத்தி தொடங்­கி­யது.

ஸ்டெர்­லைட் ஆலை­யில் உற்­பத்தி செய்­யப்­பட்ட ஆக்­சி­ஜன், கொள்­க­லன்­களில் நிரப்­பப்­பட்டு மருத்­து­வ­மனை­க­ளுக்கு அனுப்பும் பணி நேற்­றுக் காலை தொடங்­கி­யது.

இந்­நி­லை­யில், ஐந்து டன் ஆக்­சி­ஜன் நெல்லை அரசு மருத்­து­வ­ம­னை­யின் உயிர்­வளிச் சேமிப்­புக் கிடங்­கில் நிரப்­பப்­பட்­டது.

கண்­கா­ணிப்­புக்­கு­ழுத் தலை­வ­ரும் தூத்­துக்­குடி மாவட்ட ஆட்­சி­ய­ரு­மான செந்­தில்­ராஜ் ஆக்­சி­ஜன் விநி­யோ­கத்தை கொடி­ய­சைத்து தொடங்கி வைத்­தார்.