கடலூர்: சிப்காட் தொழிற்கூட வளாகத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் நேற்று காலை கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரசாயனக் கசிவு காரணமாக அப்பகுதியில், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

