'தடுப்பூசி மீதான ஜிஎஸ்டியை நீக்குக'

'தடுப்பூசி மீதான ஜிஎஸ்டியை நீக்குக'

1 mins read
6e7f9cee-e804-4a8a-9cb3-7565095ed981
-

சென்னை: கொரோனா தடுப்­பூசி மற்­றும் மருந்­து­கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்­டும். நிலு­வை­யில் உள்ள ஜிஎஸ்டி தொகை மற்­றும் அரிசி மானி­யத் தொகை­க­ளை­விடு­விக்க வேண்­டும்.

மாநில அர­சின் கடன் வாங்­கும் அளவை உற்­பத்தி மதிப்­பில் இருந்து மேலும் ஒரு விழுக்காடு உயர்த்த வேண்­டும் என்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின், பிர­த­ம­ர் நரேந்திர மோடிக்குக் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

தொற்­றால் பொரு­ளா­தா­ரம் பாதிக்­கப்­பட்டு, மாநில அர­சு­க­ளின் வரி வரு­வாய் வளர்ச்சி குறைந்­துள்­ள­தால், அதனை ஈடு­செய்ய இந்த மூன்று நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொண்டு மாநில அர­சு­க­ளுக்கு உதவ வேண்­டும் என்று அவர், அந்­தக் கடி­தத்­தில் கேட்­டுக் கொண்­டார்.