சாலைகளின் மட்டத்தை உயர்த்தக் கூடாது: தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்து

சாலைகளின் மட்டத்தை உயர்த்தக் கூடாது: தலைமைச் செயலர் இறையன்பு அறிவுறுத்து

2 mins read
b1fc5c60-b47c-4e52-84cf-bf2388db9c95
-

சென்னை: சாலைப் புதுப்­பிப்­புப் பணி­களை மேற்­கொள்­ளும் ஒப்­பந்­ததா­ரர்­கள், சாலை­யைப் புதுப்­பிக்க அதன் மட்­டத்தை உயர்த்­தக்­கூடாது. சாலை­யின் மேற்­ப­ரப்பை சுரண்டி எடுத்­து­விட்­டுத்­தான் சாலை மேம்­பாட்­டுப் பணி­கள் மேற்­கொள்ள வேண்­டும் என்று தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லர் வெ.இறை­யன்பு (படம்) அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

மேம்பாட்டுப்பணி என்ற பெய­ரில் சாலை­க­ளின் மட்­டத்தை உயர்த்­திக்­கொண்டே சென்­றால் சாலை­கள் உயர்ந்து வீடு­கள் தாழ்ந்­து­விடும்.

இந்­தப் பிரச்­சி­னைக்கு முடி­வு­கட்ட வேண்­டு­மெ­னில், இனி சாலை மேம்பாட்டுப் பணி­க­ளால் சாலை­கள் உயர்த்­தப்­ப­டு­வது தடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அவர் ஓர் அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.

முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர், சாலை மேம்பாட்டுப் பணியின்போது முன்­பி­ருந்­த­வற்றை சுரண்டி எடுத்துவிட்டு பின்­பு­தான் புதிய சாலை­கள் இடு­வார்­கள்.

காலப்­போக்­கில் இந்த வழக்­கம் மாறி­விட்­டது. ஏற்­கெ­னவே உள்ள சாலை­கள் மேலேயே புதி­தாக ஓர் அடுக்கு சாலையை அமைத்து விடு­கின்­ற­னர்.

சாலை­க­ளின் மட்­டத்­தைக் கண்­மூ­டித்­த­ன­மாக உயர்த்­திக்­கொண்டே செல்­வ­தைத் தடுக்­கும் நோக்­கில், இது­பற்றி நெடுஞ்­சா­லைத் துறை உள்­ளிட்ட சம்­பந்­தப்­பட்ட துறை­களுக்கு அறிக்கை ஒன்றை தலை­மைச் செய­லர் இறை­யன்பு அனுப்­பி­யுள்­ளார்.

"மாந­க­ராட்சி எல்­லைக்­குள் இருக்­கும் சாலை­கள் ஏற்­கெ­னவே இரண்டு அல்­லது மூன்று அடுக்கு அடர்­த­ளம் இடப்­பட்­டி­ருக்­கும். எனவே, இன்­னோர் அடுக்கு அடர்­த­ள­மிட்­டுச் சாலை மட்­டத்தை உயர்த்த வேண்­டி­ய­தில்லை.

"எனவே, நெடுஞ்­சா­லைத் துறை மூல­மாக மாந­க­ராட்சி, நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்­சிப் பகு­தி­களில் சாலைப் பணி­கள் மேற்­கொள்­ளும்­போது, சாலை­க­ளின் மேற்­ப­ரப்­பைச் சுரண்டி எடுத்­து­விட்டு அதே அள­வுக்கு மேற்­த­ளம் அமைக்­கும் வகை­யி­லான புதிய வழி­காட்டு நெறி­முறை­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

"மாந­க­ராட்சி, நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்சிப் பகுதி சாலை­கள் ஏற்­கெ­னவே போது­மான கனத்­து­டன் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ள­தால் பிபிடி சோதனை மேற்­கொள்ள வேண்­டி­ய­தில்லை.

"எந்­தச் சூழ்­நி­லை­யி­லும் மாந­க­ராட்சி, நக­ராட்சி, பேரூ­ராட்­சிப் பகு­தி­களில் சாலை­க­ளின் மட்­டத்தை அதி­க­ரிக்­கக் கூடாது.

"சாலை­க­ளின் மேல்­த­ளக் கட்டு­மா­னத்தை மட்­டும் தேவைப்­படும் கனத்­துக்­குச் சுரண்டி எடுத்­து­விட்டு அதே அளவு மேற்­த­ளம் இட வேண்­டும்," என்று அந்த அறிக்கையில் குறிப்­பிட்­டுள்­ளார் தலை­மைச் செய­லர் இறை­யன்பு.