அரசு மருத்துவமனைகளுக்கு ஆலய உணவு விநியோகம்

அரசு மருத்துவமனைகளுக்கு ஆலய உணவு விநியோகம்

2 mins read
14829b6a-2001-42ee-bb0a-7602b9d3275d
சென்ற வியாழக்கிழமை கூடலழகர் திருக்கோயிலில் விநியோகத்திற்கு தயாராக இருந்த உணவுப் பொட்டலங்கள்.படம்: த இந்து -

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசு வரர் கோயிலிலிருந்து நாள்தோறும் அரசு மருத்துவமனைக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2,000 உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ. தளபதி, நோயாளி மற்றும் உறவினர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். முதல் நாளில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சாதம் என்ற வகையில் உணவுப் பொட்ட லங்கள் விநியோகிக்கப்படுகிறது.

உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர், கபசுர குடிநீர், முகக் கவசம் போன்றவையும் வழங்கப்படும்.

கொரோனா பொது­மு­டக்­கம் கார­ண­மாக இந்து அற­நி­லை­யத் துறைக்கு உட்­பட்ட கோவில்­கள் சார்­பில் அரு­கில் உள்ள அரசு மருத்­து­வ­மனை நோயா­ளி­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­கள் வழங்க வேண்­டும் என்று இந்து அற நிலை­யத்­துறை உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அந்த உத்­த­ர­வின்ே­ப­ரில் மீனாட்சி சுந்­த­ரே­சு­வ­ரர் கோவி­லில் இருந்து அரசு மருத்­து­வ­ம­னைக்கு நாள்தோறும் உணவுப் பொட்­ட­லங்­கள் வழங்­கும் பணி தொடங்­கப்­பட்டு உள்­ளது.

மதுரை மற்­றும் விரு­து­ந­கர் மாவட்டங்­களில் உள்ள கோயில்­ க­ளி­லி­ருந்து மொத்­தம் 6,000 பொட்­ட­லங்­கள் நாள்­தோ­றும் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வதாக 'த இந்து' இணையம் தெரிவித்தது.

மதுரை வட்­டா­ரத்­துக்­கான இந்து சமய அறக்­கட்­டளை கூட்டு ஆணை­யரான சி. ஸ்ரீகு­ம­ர­துரை, பொது முடக்­கத்­தால் உணவு கிடைப்­பது சிர­மமா­கி­யி­ருப்­ப­தால் மதுரை வட்டாரத்­தில் இந்து அறக்கட்­டளை வாரி­யத்­தின் கீழ் செயல்­படும் 57 கோயில்­க­ளி­லி­ருந்து கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கும் சுகா­தாரப் பராம ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் வீடில்­லா­த­வர் களுக்­கும் தின­மும் 6,000 பொட்­ட­லம் விநி­யோ­கிக்­கப்­படும்," என்­றார்.

கூடலழ­கர் பெரு­மாள் கோயி­லின் நிர்­வா­கி­கள், அரசு மருத்­து­வ ­ம­னைக்­கும் ஆல­யம் அருகே உள்ள வீடற்­ற­வர்­க­ளுக்­கும் 150 உண­வுப் பொட்­ட­லங்­களை விநியோகித்தனர்.

திருப்­ப­ரங்­குன்­றம் சுப்­ர­ம­ணி­ய­சு­வாமி கோயி­லின் நிர்­வாக அதி­காரி எம். ராம­சாமி, அரசு மருத்­து வ­ம­னை­யில் உள்ள கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு கோயி­லி­லி­ருந்து 275 உண­வுப் பொட்­ட­லங்­கள் விநி­யோ­கிக்­கப்பட்­ட­தாக தெரி­வித்­ தார்.