சென்னை: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை வந்து சேர்ந்த முதல் 'உயிர்வாயு ரயிலை' சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துைற அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிர மணியன், "தற்போது எண்பது மெட்ரிக் டன் உயிர்வாயு சென்னை வந்து உள்ளதாக வும் இது மற்ற மாவட்டங் களுக்கு பிரித்து அளிக்கப் படும்," என்று கூறினார். உயிர்வாயு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 'உயிர்வாயு எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங் களுக்கு உயிர்வாயு டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படு கின்றன. இதில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் நேற்று வரை 115 'உயிர்வாயு எக்ஸ்பிரஸ்' ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்திருப் பதாகவும் இதில் 444 டேங்கர்களில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருப்ப பதாகவும் ரயில்வே கூறி உள்ளது. இதுவரை 7,115 டன் மருத்துவ உயிர்வாயுவை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பதாகவும் ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

