நடிகர் ரஜினிகாந்துக்கு 2வது முறை தடுப்பூசி

நடிகர் ரஜினிகாந்துக்கு 2வது முறை தடுப்பூசி

1 mins read
9f44545a-514a-454d-a1f1-b09da7a8c0f3
ரஜினிகாந்த் 2வது முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதை காட்டும் படத்தை அவரது மகள் சௌந்தர்யா வெளியிட்டுள்ளார். படம்: டுவிட்டர் சௌந்தர்யா ரஜினிகாந்த். -

சென்னை: நடி­கர் ரஜி­னி­காந்த் 2வது முறை தடுப்­பூ­சியை போட்­டுக் கொண்­டுள்­ளார்.

'அண்­ணாத்த' படப்­பி­டிப்பை முடித்த பிறகு சென்­னை­யில் ரஜினி ஓய்­வெ­டுத்து வரு­கி­றார்.

கொரோனா தொற்­றின் இரண்­டா­வது அலை, தீவி­ர­மாக பரவி வரும் நிலை­யில் நடி­கர் ரஜினி நேற்று இரண்­டா­வது தவணை கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டார்.

ரஜினி தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளும் படத்தை அவ­ரது மகள் ெசளந்­தர்யா டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்­ளார்.

அந்­தப் பதி­வில் கொரோனா கிரு­மிக்கு எதி­ரான இப்­போரை ஒன்­றாக எதிர்த்து போரா­டு­வோம் என்று கூறி­யுள்­ளார்.

இரண்­டாம் தவ­ணை­யாக கொவி­ஷீல்ட் தடுப்­பூ­சியை மருத்து­ வ­ம­னை­யில் ரஜினி போட்­டுக் கொண்­டார் என்று ரஜி­னி­யின் செய்தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­துள்­ள­தாக தினத்தந்தி தெரி­விக்­கிறது. ஆனால் முதல் தடுப்­பூ­சியை அவர் எப்­போது எங்கு போட்­டுக் கொண்­டார் என்ற விவ­ரம் தெரி­ய­வில்லை.