சென்னை: தமிழகத்தில் வெள்ளிக் கிழமையிலிருந்து(நேற்று முதல்) அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக் கிழமை புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்தது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிதாக உருவாகும் புயல் எச்சரிக் கையை தொடர்ந்து தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் கடற்கரை பகுதிகளிலிருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீன வர்கள் கரை திரும்பும்படி கடலோரக் காவல்படை கேட்டுக் கொண்டது. சிவப்புக்கொடி காட்டியும் ஒலி பெருக்கி மூலமும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை மீனவர் களுக்கு கடலோர காவல்படை அறி வுறுத்தியுள்ளது. புதிதாக புயல் உரு வாகுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கடலோரக் காவல்படை கூறியுள்ளது.

