பள்ளிகளில் சிகிச்சை மையங்கள்

பள்ளிகளில் சிகிச்சை மையங்கள்

2 mins read
02a5b1a6-d6b1-43d8-8b23-1146d7e1ab20
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொவிட்-19 பர­வல் தொடர்ந்து ஏறு­மு­கம் கண்டு வரு­வ­தை­ய­டுத்து, கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குச் சிகிச்சை அளிக்­கும் வித­மாக பள்ளி­களில் மருத்­துவ முகாம்­களை அமைக்க தமி­ழக அரசு திட்­ட­மிட்டு இருக்­கிறது.

அதற்­கே­து­வாக, முகாம்­களை ஏற்­ப­டுத்த தயார்­நி­லை­யில் பள்­ளி­களை வைத்­தி­ருக்­கும்­படி பள்­ளிக் கல்­வித்­துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

அவ்­வ­கை­யில் சென்­னை­யில் அரசு மற்­றும் அரசு உதவி பெறும் மேல்­நிலை, உயர்­நி­லைப் பள்­ளி­கள், தனி­யார் பள்­ளி­கள், மாந­க­ராட்­சிப் பள்­ளி­கள் அனைத்­தை­யும் தயார் நிலை­யில் வைத்­தி­ருக்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்­டி­லும் சென்­னை­யில் 66 பள்­ளி­களில் கொரோனா சிகிச்சை மையங்­கள் அமைக்­கப்­பட்­டன. பயன்­பாட்­டுக்­குப் பிறகு அதே வச­தி­க­ளு­டன் பூட்டி வைக்­கப்­பட்­டுள்ள அம்­மை­யங்­களை மீண்­டும் திறந்து, கடந்த ஆண்­டைப் போலவே சிகிச்சை அளிக்­கும் வகை­யில் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

மாந­க­ராட்­சிப் பகு­திக்­குள் வரும் பெரிய பள்­ளி­கள் அனைத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்ள அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது. அது குறித்து விரை­வில் மாந­க­ராட்சி ஆணை­ய­ரு­டன் கலந்­தாலோ­சித்து, பள்­ளி­களில் படுக்கை வச­தி­களை ஏற்­படுத்தி, கொரோனா நோயா­ளி­களுக்­குச் சிகிச்சை வழங்க ஏற்­பாடு செய்து வரு­கிறது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இருநூறாயிரத்தை நெருங்குகிறது

இத­னி­டையே, தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அத்­தொற்­றால் மேலும் 288 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இதை­ய­டுத்து, ஒட்­டு­மொத்த பாதிப்பு எண்­ணிக்கை 1,531,377ஆக உயர்ந்­தது. அவர்­களில் 1,318,982 பேர் தொற்­றி­லி­ருந்து தேறி­விட்­ட­னர்; 17,056 பேர் மாண்­டு­போ­யி­னர். கிரு­மித்­தொற்­றுக்­காக மருத்­து­வ­மனை­களில் இன்­னும் 195,339 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தொற்­றுப் பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் அர­சாங்­கம் முழு ஊர­டங்கை அறி­வித்­துள்ள நிலை­யில், அத­னால் கிரு­மித்­தொற்று குறை­யுமா என இப்­போதே கணிக்க இய­லாது என வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

அதே வேளை­யில், கொரோனா தடுப்­பூசி மையங்­களில் கூட்­டம் நிரம்பி வழி­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. நேற்று முன்­தி­னம் இரவு 7 மணிவரை 52,730 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதற்கு முதல்நாள் வியாழக்கிழமையன்று 92,732 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டனர்.

கட்டளை மையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வும் நோக்­கில் சென்னை­யில் உள்ள மருத்­து­வம் மற்­றும் ஊர­கப் பணி­கள் இயக்­க­கத்­தில் கட்­டளை மையம் (war room) ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. கொரோனா நோயாளி­களுக்­குத் தேவை­யான உயிர்­வளி வச­தி­யுடன் கூடிய படுக்கை, செயற்­கை சுவா­சக் கருவி, ரெம்­டெ­சி­விர் மருந்து போன்ற வச­தி­களை இம்மையம் ஒருங்­கி­ணைக்­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் இரவு 10.30 மணி­ய­ள­வில் இம்­மை­யத்­திற்­குச் சென்ற தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அங்கு நடை­பெ­றும் பணி­களை ஆய்வு செய்­தார். அப்­போது, பங்­க­ஜம் என்­ப­வ­ரி­டம் இருந்து '104' அழைப்பு எண்­ணுக்கு வந்த அழைப்பை எடுத்­துப் பேசிய முதல்­வர், அவ­ரது தேவை­யைப் பதி­வு­செய்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கான படுக்கை வச­தி வழங்க உத்­த­ர­விட்­டார்.

அதன்பின் மையத்­திற்கு வரும் அனைத்து அழைப்­பு­களுக்­கும் முறை­யான உத­வி­யை­யும் ஆலோ­ச­னை­யை­யும் தடை­யின்றி வழங்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அதி­கா­ரி­க­ளுக்கு முதல்­வர் அறி­வு­றுத்­தி­னார்.