டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளையர் பலி

டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளையர் பலி

1 mins read
f4119e3b-22f4-4d0d-bd1c-a85e19b6e290
சஞ்சீவ் எடுத்த 'செல்ஃபி' படமும் கிணற்றில் இருந்து மீட்கப்படும் டிராக்டரும். படம்: தமிழக ஊடகம் -

வாணி­யம்­பாடி: டிராக்­ட­ரில் அமர்ந்­த­படி செல்ஃபி எடுத்த 20 வயது இளையர் ஒருவர், சற்று நேரத்தில் டிராக்­ட­ரு­டன் பாச­னக் கிணற்­றில் விழுந்து மாண்ட சம்­ப­வம் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தில் நிகழ்ந்தது.

வாணி­யம்­பாடி அருகே சின்­ன­மோட்­டூர் எனும் சிற்­றூ­ரைச் சேர்ந்­த­வர் சஞ்­சீவ். சமை­யற்­கல்வி பயின்று வந்த இவர், ஊர­டங்கு கார­ண­மாக வீட்­டில் இருந்­தார்.

நேற்று முன்­தி­னம் தமது வீட்­டின் அரு­கே­யுள்ள வேளாண் நிலத்­திற்­குச் சென்­றார் சஞ்­சீவ். அப்­போது, அங்கு சௌந்­தர் என்­ப­வர் டிராக்­ட­ரில் உழு­து­கொண்­டி­ருந்­தார். நண்­ப­கல் உணவு உண்­ப­தற்­காக சௌந்­தர் சாவியை எடுக்­கா­மல் டிராக்­டரை நிலத்­தில் நிறுத்­திவிட்டுச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர் சென்­ற­பின் டிராக்­ட­ரில் ஏறிய சஞ்­சீவ், அதை ஓட்­டு­வ­து­போல படம் எடுத்து, வாட்ஸ்­அப் வழியாகப் பகிர்ந்­தார். பின்­னர் சாவி­யைச் சொடுக்கி டிராக்­டரை இயக்க முயன்­ற­போது, அது கட்­டுப்­பாட்டை இழந்து அரு­கி­லி­ருந்த 120 அடி ஆழக் கிணற்­றி­னுள் பாய்ந்­தது.

சத்­தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தில் இருந்­த­வர்­கள் ஓடி வந்து பார்த்­த­னர். கிணற்­றில் 35 அடி ஆழத்­திற்­குத் தண்­ணீர் இருந்­த­தால் சஞ்­சீ­வைக் காப்­பாற்ற அவர்­கள், காவல்­து­றைக்­கும் தீய­ணைப்­புத் துறைக்­கும் தக­வல் அளித்தனர்.

விரைந்து வந்த தீய­ணைப்­புத் துறை­யி­னர் மின்­மோட்­டார் மூலம் கிணற்­றில் இருந்த தண்­ணீரை வெளி­யேற்­றி­னர். பின்­னர் கயிறு கட்டி கிணற்­றில் இறங்­கிய அவர்­கள், கிட்­டத்­தட்ட ஐந்து மணி நேர­மா­கப் போராடி சஞ்­சீவை உயி­ரற்ற நிலை­யில் மீட்­ட­னர்.

அதன்­பின் சிறிது நேரம் கழித்து பொக்­லைன் இயந்­தி­ரத்­தின் உதவி­யு­டன் கிணற்­றில் விழுந்த டிராக்­டரைத் தீய­ணைப்­புத் துறை­யி­னர் மீட்­ட­னர்.