புதிய கட்டுப்பாடுகள்: கடைகளில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்

புதிய கட்டுப்பாடுகள்: கடைகளில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்

1 mins read
800dc4e5-c7f7-4ebd-87cb-3c210eecf9b9
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 24ஆம் தேதி காலை­வரை முழு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், நேற்­றுக் காலை­யில் இருந்து புதிய கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அதன்­படி, தனி­யாக இய­ங்கும் மளிகை, காய்­கறி, இறைச்சி, மீன் கடை­கள் காலை 6 மணி­யில் இருந்து 10 மணி­வரை மட்­டுமே திறக்­கப்­பட வேண்­டும். மின்­வ­ணிக நிறு­வ­னங்­களும் காலை 10 மணிக்­குள் விநி­யோ­கத்­தினை முடித்­துக்­கொள்ள வேண்­டும். காய்­கனி, பூ விற்­கும் நடை­பா­தைக் கடை­களும் தேநீர்க் கடை­களும் செயல்­பட அனு­மதி இல்லை.

அத்­தி­யா­வ­சி­யப் பணி­க­ளுக்­காக மாவட்­டத்­திற்­குள்­ளும் மாவட்­டங்­க­ளுக்கு இடை­யி­லும் பய­ணம் செய்ய 'இ-பாஸ்' முறை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, நான்கு மணி நேரத்­திற்­குள் பொருள்­களை வாங்­கி­யாக வேண்­டும் என்­ப­தால் சிவ­காசிக் கடை வீதி­களில் நேற்­றுக் காலை­யில் மக்­கள் கூட்­டம் மிகுந்து காணப்­பட்­ட­தா­க­வும் முகக்­க­வ­சம், சமூக இடை­வெளி போன்ற பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் பொது­மக்­கள் வீதி­களில் நட­மா­டி­ய­தைக் காண முடிந்­த­தா­க­வும் 'தினத்­தந்தி' செய்தி கூறி­யது.

கொரோனா தடுப்பு விதி­க­ளைப் பின்­பற்­றும்­படி ஒலி­பெருக்­கி­யில் போலிஸ் அறி­வித்­த­படி இருந்­த­து.

இன்று தளர்­வு­க­ளின்றி முழு முடக்­கம் என்­ப­தால் தமி­ழ­கத்­தின் பல இடங்­க­ளி­லும் இறைச்­சிக் கடை­களில் கூட்­டம் அலை­மோ­தியது.

இத­னி­டையே, சென்னை மாந­க­ராட்­சிக்­குட்­பட்ட பகு­தி­களில் அர­சின் வழி­காட்டு நெறி­மு­றை­க­ளை­யும் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் நடை­முறைப்­ப­டுத்த குழு­விற்கு ஐவர் கொண்ட 30 குழுக்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.