சென்னை: தமிழ்நாட்டில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான வெளிமாநில ஊழியர்கள் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடி வருவதாகவும் அவர்கள் ஊர் திரும்ப ரயில்களில் இடம் கிடைக்காததால் நிலையத்திலேயே தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில ஊழியர்கள் கடந்த ஆறு நாட்களாக ரயில் நிலையத்திலேயே காத்துக் கிடப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து இரண்டு கொவிட்-19 சிறப்பு ரயில்கள் பிற்பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் புறப்படுகின்றன. அவற்றில் பயணச்சீட்டுகளைப் பெறுவது கடைசி வரையில் பெரும் போராட்டமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில ஊழியர்கள் இரண்டு முறை முன்பதிவு செய்தும் பெரும் பணத்தை இழக்கிறார்கள் என்று சிலர் தெரிவித்தனர்.
முகவர்களைச் சார்ந்திருப்பதால் பலர் ஏமாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்பதிவு செய்து இருந்தாலும் பலருக்கும் இடம் கிடைக்காமல் போவதாகவும் கூறப் படுகிறது.

