புயல் காரணமாக தொடர் மழை; குமரி மாவட்டத்தில் வெள்ளம்

புயல் காரணமாக தொடர் மழை; குமரி மாவட்டத்தில் வெள்ளம்

2 mins read
0321d3f7-9aed-42b0-bf36-d1d15bde7336
தமிழக மீனவர்கள் 10 பேருடன் கொச்சியில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது. அந்த மீனவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் அருகே உள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: அர­பிக்­க­ட­லில் உருவான டவ்தே புயல் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் குமரி, திண்­டுக்­கல், தேனி, ராம­நா­த­பு­ரம் உள்­ளிட்ட ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்கு அபாய அறி­விப்பு விடுக்­கப்­பட்டு இருந்­தது.

என்­றா­லும் குமரி மாவட்­டத்­தில் கடந்த சில நாட்­க­ளாக பெய்த கடுமை­யான மழை கார­ண­மாக பல ஆறு­க­ளி­லும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு இருக்­கிறது.

தனுஷ்­கோடி, பாம்­பன் பகு­தி­களில் கடல் உள்­வாங்­கி­ய­தால் மக்­கள் அதிர்ச்சி அடைந்து இருக்­கிறார்­கள். ராமன்­துறை கடற்­கரை கிரா­மங்­களில் சூறா­வ­ளிக் காற்று வீசி­ய­தன் கார­ண­மாக பல வீடு­கள் சேத­ம­டைந்­தன. இடி­பா­டு­களில் சிக்கி இரண்டு பேர் பலி­யா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

குமரி மாவட்­டத்­தில் பல அணைக்­கட்­டு­களில் நீர்­மட்­டம் நிரம்­பி­விட்­ட­தா­க­வும் குழித்­துறை, தாமி­ர­ப­ரணி, பழை­யாறு, வள்­ளி­யாறு ஆகி­ய­வற்­றி­லும் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­வ­தா­க­வும் பொதுப் பணித்­துறை வெள்ள அபாய எச்­ச­ரிக்கை வெளி­யிட்டு இருப்­ப­தா­க­வும் தக­வல்­கள் கூறின.

பாம்­பன் வடக்கு கடற்­ப­கு­தி­யில் நீண்ட தூரத்­திற்கு கடல் உள்­வாங்­கி­ய­தால் ஏரா­ள­மான நாட்டுப் பட­கு­கள் தரை­தட்டி நிற்­கின்­றன.

ராமேஸ்­வ­ரம் பகு­தி­யி­லும் திண்­டுக்­கல் மாவட்­டம் கொடைக்­கானல் பகு­தி­யி­லும் பலத்த காற்று வீசி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

தேனி மாவட்­டத்­தி­லும் கடந்த சில நாட்­க­ளாக மழை பெய்து வரு­வ­தால் ஏரா­ள­மான மரங்­கள் வேரோடு சாய்ந்து இருப்­ப­தா­க­வும் பாலங்­கள் உடைந்து இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, கொச்சி அருகே புயல் கார­ண­மாக கட­லில் கவிழ்ந்து ­விட்ட பட­கில் இருந்த நாகப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த 10 மீன­வர்­களைக் காண­வில்லை என்று கவலை தெரி­வித்­துள்ள உற­வினர்­கள் அந்த மீன­வர்­களை உட­ன­டி­யாக காப்­பாற்­றும்­படி அதி­கா­ரி­களுக்குக் கோரிக்கை விடுத்­தனர்.

மணி­கண்­டன் என்­ப­வர் தன் கிரா­மத்­தைச் சேர்ந்த 10 பேரு­டன் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆழ்­க­ட­லில் மீன்­பி­டிக்­கச் சென்­ற­தா­க­வும் புயல் எச்­ச­ரிக்­கையை அடுத்து வேக­மா­கக் கரை­தி­ரும்­பி­ய­போது படகு புய­லில் சிக்­கி­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.