கொரோனா கொடுமை: தாயை ஏற்காத மகள்

கொரோனா கொடுமை: தாயை ஏற்காத மகள்

2 mins read
22946113-10bb-4eae-9381-2942d1d32cc3
-

ஈரோடு: கொரோனா தொற்று ஏற் பட்­டு­விட்­டது என்­ப­தால் தன்­னைப் பெற்ற தாயையே ஒரு மகள் வீட்டுக்­குள் அனு­ம­திக்­க­வில்லை.

உற­வி­னர்­கள், ஊர் மக்­கள் தொடத் தயங்­கிய அந்த முதிய மாதை செந்­தில் என்ற போலிஸ் அதி­காரி ஒரு­வர் கைத்தாங்­க­லாக அழைத்­தச் சென்று கயிற்­றுக் கட்டி­லில் படுக்­க­வைத்­தார்.

பொழுது விடிந்­த­தும் அந்த 60 வயது மாது மருத்­துவ வாக­னத்­தில் அரசு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

இந்­தச் சம்­ப­வம் ஈரோடு புஞ்சை ­பு­ளி­யம்­பட்­டி­யில் இரண்டு நாட்­களுக்கு முன் நிகழ்ந்­தது. அந்த மாதுக்கு இரண்டு மகன்­கள், ஒரு மகள் உள்­ள­னர். கண­வர் மர­ண­மடைந்­துவிட்­டார். முதிய மாது தன் பெண் வீட்­டில் வசித்து வந்­தார்.

உடல்­நிலை சரி­யில்­லா­மல் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்றபோது முதிய மாதுக்கு கொரோனா தொற்றி இருப்­பது தெரி­ய­வந்­தது. அவர் அங்­கி­ருந்து புஞ்­சை­பு­ளி­யம்­பட்­டி­யில் உள்ள தன் மகள் வீட்டுக்­குச் சென்­றார். ஆனால் அவரை வீட்­டின் உள்ளேவிட மகள் மறுத்து விட்­டார். தெரு ஓர­மாக அந்த மாது உட்­கார்ந்து கிடந்­தார். யாரும் உதவ முன்­வ­ர­வில்லை. சிலர் அதி­காரி களுக்­குச் செய்தி தெரி­வித்­த­னர்.

போலி­சார் வந்து அந்த மக­ளிடம் கெஞ்சி வீட்­டின் வெளிப்­ பக்கத்­தில் இர­வில் தங்க மட்­டும் அந்­தத் தாய்க்கு இடம் தரும்­படி கேட்டுக்­கொண்­ட­னர்.

யாரும் தொட முன்வ­ராத அந்த மாதை போலிஸ் அதி­காரி செந்தில் அழைத்­துச் சென்று ஒரு கட்­டிலில் படுக்­க­ வைத்­தார். அதற்குள்ளாக அந்த மகள் வீட்டின் கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்று விட்டார்.