செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9701fad4-4895-4fb1-b057-10fb29c3d894
-

தமிழ்நாடு நேரடியாக தடுப்பூசி மருந்து வாங்குகிறது

சென்னை: கொரோனா தடுப்பூசி மருந்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியைக் கோரி உள்ளது. அதில், 90 நாட்களில் 50 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கக் கூடிய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழாவில் விதிமீறல், பிரச்சினை;

50 பேர் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கோயில் திருவிழா தொடர்பாக இரு பிரிவினரிடையே பதற்றம் நிலவி வருவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

கோயில் திருவிழாவில் கொரோனா ஊரடங்கை மீறி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்ததாகவும் அதைப் பற்றி ஒருவர் போலிசிடம் புகார் தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் அதனால் இரண்டு பிரிவின ருக்கு இடையே பிரச்சினை மூண்டது என்றும் தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறின.

விழா குழுவினர் சிலர் மன்னிப்பு கேட்டதைச் சிலர் எதிர்த்ததால் மீண்டும் இரு பிரிவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதையடுத்து 50 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அமைச்சர்: ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீங்கும்

சிவகாசி: தமிழகத்தில் மூன்று நாட்களுக்குள் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்குமென தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். நெதர்லாந்து நாட்டில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் கலனில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

குடம் தண்ணீர் 10 ரூபாய்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாலங்குடி என்ற பகுதியில் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து மக்கள் வாங்கு கிறார்கள். காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப் படாததே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

அப்பகுதி மக்களில் பலரும் 10 ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வாங்க வசதியில்லாததால் திறந்தவெளி கிணற்று நீரையே பயன்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும் மக்கள் கூறுவதாகத் தெரியவந்துள்ளது.