ஸ்டாலின் அரசுக்கு குவியும் நிதி

ஸ்டாலின் அரசுக்கு குவியும் நிதி

2 mins read
64f0813c-45bb-49d5-915d-712fdcf5d57b
-

சென்னை: கொரோனா நோயை கட்­டுப்­ப­டுத்­த­வும் தேவை­யான மருத்­துவ சிகிச்சை அளிக்­க­வும் தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.

இப்­ப­ணி­க­ளுக்­காக நிதி வழங்­கும்­படி முதல்­வர் ஸ்டா­லின் வேண்டு­கோள் விடுத்­தி­ருந்­தார். அதற்கு எவ்­வித பாகு­பா­டும் இன்றி பல்­வேறு தரப்­பி­ன­ரும் நிதியை வாரி வழங்கி வரு­கின்­ற­னர்.

சனிக்­கி­ழமை தொடங்கி நேற்று காலை வரை திரண்ட நிதி விவ­ரத்தை தமி­ழக அரசு வெளி­யிட்­டு ள்­ளது. சக்தி மசாலா நிறு­வ­னம் சார்­பில் ரூ. 5 கோடி தமி­ழக முதல்­வர் நிவா­ரண நிதிக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­கித், நிவா­ரண நிதிக்கு தன் விருப்­பு­ரிமை நிதி­யி­லி­ருந்து ஒரு கோடி ரூபாய், தன் ஒரு மாதச் சம்­ப­ளம் ஆகி­ய­வற்­றுக்­கான காசோ­லையை முதல்­வ­ரி­டம் வழங்­கி­னார்.

இந்து சமய அற­நி­லை­யத்­

து­றை­யின்­கீழ் உள்ள 47 கோயில்­களில் பணி­பு­ரி­யும் 3,500க்கும் மேற்­பட்ட பணி­யா­ளர்­க­ளின் மே மாதத்­திற்­கு­ரிய சம்­ப­ளம் ரூ.50 லட்­சத்தை நிவா­ரண நிதி­யாக வழங்க முன்­வந்­துள்­ள­னர்.

முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் கொலை வழக்­கில் ஆயுள் தண்­டனை பெற்ற கைதி ரவிச்­சந்­தி­ரன் சிறை­யில் தான் வேலை செய்து பெற்ற சம்­ப­ளத்­தில் ரூ.5 ஆயி­ரத்தை­ மு­தல்­வர் நிவா­ரண நிதிக்கு வழங்­கி­னார்.

ஸ்ரீ ராமச்­சந்­திரா மருத்­து­வக் கல்­லூரி மற்­றும் ஆய்வு நிறு­வ­னம் ரூ.1 கோடி, சென்னை சில்க்ஸ் ரூ.1 கோடி, சென்னை பப்­ளிக் ஸ்கூல் ரூ.1 கோடி, பட்­டர்­ஃபிளை நிறு­வ­னம் ரூ.1 கோடி, நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் ரூ.25 லட்­சம், நடி­கர் ஜெயம் ரவி ரூ.10 லட்­சம், இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் ரூ.10 லட்­சம் என பட்­டி­யல் நீளு­கிறது.

எதிர்த்தரப்பு தமிழ் மாநில காங்கிரஸ் தலை­வர் ஜி.கே. வாச னும் ரூ.10 லட்­சம் முதல்வர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

ஆளுநர் முதல் எதிர்த்தரப்பு அரசியல் தலைவர் வரை பாகுபாடின்றி அள்ளித் தருகிறார்கள்