சென்னை: தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் 64 கர்ப்பிணிகள் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 38 பேர் கொரோனா கிருமித்தொற்றால் மரணமடைந்தவர்கள். சென்னையில் ஒரு மருத்துவமனையில் மட்டும் ஏப்ரல், மே மாதங்களில் 9 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர். எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவ
மனையில் கிருமித்தொற்று முதல் அலையின்போது 800 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டாலும் அவர்களில் ஐவர் மட்டுமே உயிரிழந்தனர்.
ஆனால், 2வது அலையில் இரு மாதங்களில் 200 கர்ப்பிணிகளுக்குத் தொற்று ஏற்பட்டு இம்மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலை யில் அவர்களில் ஐவர் ஏப்ரலிலும் நால்வர் இம்மாதமும் மாண்டதாக மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக அரசு மருத்துவமனை உதவியுடன் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என இம்மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் சாந்தி கூறினார்.

