புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: தமிழக அரசு புறக்கணிப்பு

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: தமிழக அரசு புறக்கணிப்பு

1 mins read
4031971c-0978-4049-ac7b-8629afb5510f
-

சென்னை: புதிய கல்­விக் கொள்கை தொடர்­பில் மத்­திய கல்வி அமைச்­சர் ரமேஷ் பொக்­ரி­யால் தலை­மை­யில் நேற்று நடந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தைத் தமி­ழக அரசு புறக்­கணித்­தது.

அனைத்து மாநி­லங்­க­ளின் கல்­வித்­து­றைச் செய­லா­ளர்­களும் அந்த மெய்­நி­கர் கூட்­டத்­தில் பங்­கேற்க அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், மாநிலங்­க­ளின் கல்வி அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்க அனு­ம­திக்க வேண்­டும் என்று தமி­ழக அரசு கோரிக்கை விடுத்­தது. அக்­கோ­ரிக்கை நிரா­கரிக்­கப்­ப­டவே, கூட்­டத்­தைப் புறக்­கணிப்­ப­தாக தமி­ழக பள்­ளிக்­கல்வி அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்யா­மொழி தெரி­வித்­தார்.

"கல்வி அமைச்­சரை ஆலோ­சனைக்கு அழைக்­கா­மல் துறை அதி­கா­ரியை மத்­திய அரசு அழைத்­தது கண்­டிக்­கத்­தக்­கது. மத்­திய அர­சின் செய­லைக் கண்­டிக்­கும் வித­மா­க ஆலோ­சனை­யைத் தமி­ழக அரசு புறக்­க­ணித்­தது," என்று அமைச்­சர் விளக்­க­ம­ளித்­தார்.

புதிய கல்­விக் கொள்கை மூலம் மாநி­லங்­களில் குலக்­கல்வித் திட்­டத்­தைத் திணிக்க மத்­திய அரசு முயல்­வ­தாக அவர் செய்­தி­யா­ளர்­களி­டம் சொன்­னார்.

"புதிய கல்­விக் கொள்­கை­யில் திருத்­தம் செய்­யப்­பட வேண்­டும் என்­ப­தில் தமி­ழக அரசு உறு­தி­யாக இருக்­கிறது. இரு­மொ­ழிக் கொள்­கையை ஒழித்து, மும்­மொ­ழி­க் கொள்­கை­யைத் திணிக்­கும் வகை­யில் புதிய கல்­விக் கொள்கை உள்­ளது. மத்­தி­ய அர­சு­டன் மோதல் போக்­கு­டன் செயல்­பட வேண்­டும் என்­பது எங்­க­ளின் நோக்­க­மில்லை," என்­றார் அவர்.

அத்­து­டன், 3, 5, 8 ஆகிய வகுப்பு­க­ளுக்­குப் பொதுத் தேர்வு நடத்­து­வது குழந்­தை­க­ளிடம் மன­அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் சொன்­னார்.