பொது இடங்களில் ஆவிபிடிப்பதற்கு எதிர்ப்பு

பொது இடங்களில் ஆவிபிடிப்பதற்கு எதிர்ப்பு

2 mins read
83af32c1-86cb-4a0d-9225-12b6e113c4dc
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சார நீராவிக் கருவியைப் பயன்படுத்தும் பயணிகள். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: பொது இடங்­களில் ஆவி­பி­டிக்­கும் இயந்­தி­ரங்­களை வைக்க எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

கொவிட்-19 பர­வ­லைத் தடுக்க உத­வும் எனக் கூறி, சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­தில் 10 ஆவி­பி­டிக்­கும் இயந்­தி­ரங்­களை ரயில்வே போலிஸ் வைத்­துள்­ளது. அதில் துளசி, மஞ்­சள், கற்­பூ­ர­வள்ளி, வேம்பு உள்­ளிட்ட மூலி­கை­க­ளைப் போட்டு, ஆவி பிடிக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு­வர் ஓர் இயந்­தி­ரத்­தில் ஆவி­பி­டித்த பிறகு அந்த இயந்­தி­ரம் கிரு­மி­நா­சினி கொண்டு சுத்­தப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

பய­ணி­க­ளி­டம் வர­வேற்­பைப் பெற்­றுள்ள இந்த ஆவி­பி­டிக்­கும் இயந்­தி­ரங்­கள் படிப்­ப­டி­யாக மற்ற ரயில் நிலை­யங்­க­ளி­லும் வைக்­கப்­படும் என்று ரயில்வே போலிஸ் தெரி­வித்­துள்­ளது.

இது­போல, கோவை­யி­லும் நீராவி பிடிக்­கும் நிலை­ய­மும் நட­மா­டும் நீராவி பிடிக்­கும் இயந்­தி­ர­மும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், மருத்­துவ நிபு­ணர்­கள் உள்­ளிட்ட பல­ரும் இத்­திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

ஆவி­பி­டிப்­ப­தால் கொரோனா தொற்­றைத் தடுக்க முடி­யும் என்­ப­தற்கு அறி­வி­யல்­பூர்­வ­மாக எந்­தச் சான்­றும் இல்லை என்­றும் பொது இடங்­களில் அத­னைச் செய்­யும்­போது தொற்று பர­வவே அதிக வாய்ப்­புள்­ளது என்­றும் மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இத­னி­டையே, பொது இடங்­களில் ஆவி­பி­டிப்­பதை ஊக்­கு­விக்­கக்­கூ­டாது என்று தமி­ழக மருத்­துவ, குடும்ப நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அறி­வு­றுத்தி இருக்­கி­றார்.

"கொரோனா பர­வ­லைத் தடுக்க பொது இடங்­களில் மூலி­கை­கள் கலந்து ஆவி­பி­டிக்­கும் வசதி அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால், பொது இடங்­களில் அத­னைச் செய்­தால் நுரை­யீ­ரல் பாதிப்பு போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம்," என்று அவர் கூறி­னார்.

மேலும், மருத்­து­வரின் பரிந்­து­ரை­யின்றி ஆவி­பி­டிப்­பது போன்ற வற்றைச் செய்ய வேண்­டாம் என்­றும் அவர் கேட்­டுக்கொண்­டுள்­ளார்.