ஆலோசனைக் குழுவில் 13 கட்சிகளுக்கும் இடம்

ஆலோசனைக் குழுவில் 13 கட்சிகளுக்கும் இடம்

1 mins read
0c107446-0299-42b1-bf8a-20d21aea8456
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வழி­முறை­கள் குறித்து ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக, சட்­ட­மன்­றத்­தில் இடம்­பெற்­றுள்ள 13 கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட அனைத்­துக் கட்சி ஆலோ­ச­னைக் குழு அமைக்­கப்­பட்டு இருக்­கிறது.

அதன்­படி, டாக்­டர் நா.எழி­லன் (திமுக), டாக்­டர் சி.விஜ­ய­பாஸ்­கர் (அதி­முக), ஏ.எம்.முனி­ரத்தி­னம் (காங்­கி­ரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயி­னார் நாகேந்­தி­ரன் (பாஜக), டாக்டர் சதன் திரு­ம­லைக்­கு­மார் (மதி­முக), எஸ்.எஸ்.பாலாஜி (விடு­தலைச் சிறுத்­தை­கள்), வி.பி.நாகை­ மாலி (மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட்), தி.ராமச்­சந்­தி­ரன் (இந்­திய கம்­யூ­னிஸ்ட்), ஜவா­ஹி­ருல்லா (மனி­த­நேய மக்­கள் கட்சி), ரா.ஈஸ்­வ­ரன் (கொங்­கு­நாடு மக்­கள் தேசிய கட்சி), தி.வேல்­முரு­கன் (தமி­ழக வாழ்­வு­ரி­மைக் கட்சி), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பார­தம்) ஆகி­யோர் அக்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

அவ­சர அவ­சி­யம் கருதி, கொரோனா பரவ­லைக் கட்­டுப்­படுத்­தும் வழி­மு­றை­கள் குறித்து ஆலோ­சனை வழங்க, குழு­வி­னர் அவ்­வப்­போது கூடி விவா­திப்­பர்.