கிருமிப் பரவலை தடுக்க புதுமணத் தம்பதி, மாணவன் நிதியுதவி

கிருமிப் பரவலை தடுக்க புதுமணத் தம்பதி, மாணவன் நிதியுதவி

1 mins read
7232e474-1648-4f76-8123-369585ea889e
திருமணம் முடிந்த கையோடு நாகை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த புதுமணத் தம்பதிகள், ஆட்சியர் பிரவீன் நாயரைச் சந்தித்து ரூ.50,000 பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினர். படங்கள்: தமிழக ஊடகம்கோடாங்கிபட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு.வடநேரே, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் தான் சைக்கிள் வாங்க வைத்திருந்த ரூ.5,000 பணத்தை நன்ெகாடை வழங்கும் மாணவன். -
multi-img1 of 2

நாகப்­பட்­டி­னம்: திரு­ம­ணம் செய்து கொண்ட புது­ம­ணத் தம்­ப­தி­கள் முதல்­வ­ரின் பொது நிவா­ரண நிதிக்கு ரூ.50,000 பணத்தை நன் ெகா­டை­யாக வழங்கி உள்­ள­னர்.

அேதபோல், ஏழை மாணவர் ஒருவர் ரூ.5,000 பணத்தையும் திருநங்கைகள் ரூ.50,000 பணத்தை யும் முதல்வர் நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளனர்.

கொேரானா கிருமி முறி­ய­டிப்பு, நிவா­ர­ணப் பணி­க­ளுக்­காக முதல்­வரின் பொது நிவா­ரண நிதிக்கு நடிகர்கள், தொழிலதிபர்கள், அர சியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் நிதி­ அளித்து வரு­கின்­ற­னர்.

அவ்­வ­கை­யில், திரு­ம­ணம் முடித்த ஷெரின் ராஜ்-சூர்யா தம்­ப­தி­கள் நாகை ­மா­வட்ட ஆட்­சி­யர் பிர­வீன் நாய­ரைச் சந்தித்து முதல்­வரின் நிவா­ரண நிதிக்கு ரூ.50,000 வழங்­கி­னர்.

இதேேபால், கரூர் மாவட்­டம், கோடாங்கிப்பட்டி கிரா­மத்­தில் தையல்­கா­ர­ரா­க ராஜேந்திரன் என்ப வர் பணியாற்றி வரு­கி­றார்.

இவ­ரது மகன் ஜோதீஸ்­வ­ரன் பதி­னொன்­றாம் வகுப்­பில் படித்து வரு­ம் நிலையில், தான் சைக்­கிள் வாங்­கு­வ­தற்­காக சிறுகச் சிறுகச் சேமித்து வந்த ரூ.5,000 பணத்தை கரூர் மாவட்ட ஆட்­சித் தலை­வர் பிர­சாந்த் மு.வட­நே­ரே­வி­டம் நன் கொடையாக வழங்கி மக்­களை நெகிழவைத்­துள்­ளார்.

இது­கு­றித்து ஜோதீஸ்­வ­ரன் கூறு­கை­யில், "நான் 10,000 ரூபா­யில் சைக்­கிள் ஒன்று வாங்­கு­வ­தற்­காக கொஞ்­சம் கொஞ்­ச­மா­கப் பணத்ைத சேர்த்து வந்­தேன். அதே­நே­ரம், கொரோனா ஊர­டங்கு நேரத்­தில் மக்­கள் அவ­திப்­பட்டு வரும் நேரத் தில் சைக்கிளைவிட மக்கள் நலனே முக்கியமாகத் தோன்றியதால் தயங்காமல் உதவினேன்," என்றார்.

சென்­னையைச் சேர்ந்த திரு­நங்­கை­களும் ரூ.50,000 பணத்தை வழங்­கி­யுள்ளனர்.