மதுரையில் உயிர் காக்கும் ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்

மதுரையில் உயிர் காக்கும் ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்

2 mins read
228a9233-e871-4e96-96cc-e45c72000adc
-

மதுரை: மதுரை, கோயம்புத்தூரில் ஆக்சிஜன் வசதிகளுடனான பேருந்துகள் மக்களின் உயிரைக் காக்கும் வகையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

கிருமிப் பரவலின் இரண்டாவது அலை காரணமாக மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் அதிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் உள்ள 1,176 படுக்கை களும் நிரம்பி வழிவதாகவும் மே 17ஆம் தேதி ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக சில நோயாளிகள் உயி ரிழந்ததாகவும் தகவல்கள் கூறின.

இந்நிலையில், இரு ஆக்சிஜன் பேருந்துகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு உள்ளன.

மதுரையைச் சேர்ந்த ஜெயராஜ் குரூப்ஸ் தனியார் நிறுவனம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்சிஜன் பேருந்துகளை அளித்துள்ளன.

இதுகுறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் கூறுகையில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையுடன் இந்த பேருந்து களை வடிவமைத்து வழங்கி உள்ளோம். இதன்மூலம் ஒரே நேரத்தில் 14 நோயாளிகள் பயனடை யலாம். இதனை, 24 மணி நேரமும் மக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று கூறினார்.

இதேேபால், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் விதமாக கேஜிஐஎஸ்எல் நிறுவனம், தொழில் முனைவோர் கூட்டமைப்புடன் இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த திங்களன்று வழங்கியது.

இந்தப் பேருந்துகளில் தலா 12 பேர் வீதம் 24 நோயாளிகள் சிகிச்சை பெறமுடியும் என்றும் இதன்மூலம் ஆக்சிஜன் தேவைக்காக அரசு மருத்துவமனை முன்பாகக் காத்திருக்கும் நோயாளி களுக்குத் தற்காலிக தீர்வு கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.