சென்னை: கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான கி.ராஜநாராயணன், 99, வயது முதிர்வின் காரணமாக காலமானார்.
அவரது நல்லுடல் புதுச்சேரியில் இருந்து ேநற்று மதியம் 1 மணிக்கு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக்கதைகள் என பல்வேறு நூல்கள், புதினங்கள் படைத்தவர்.
'கரிசல் குயில்' கி.ரா மறைய வில்லை. எழுத்துகளாய் உயிர் வாழ்கிறார். நம் உயிரில் கலந்து வாழ்கிறார். அவரது குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
'கரிசல் குயில்' மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும் இம்மண்ணும் தமிழும் உள்ளவரை கி.ரா. புகழ் மங்காது வாழும்!
முதல்வர் மு.க.ஸ்டாலின்

