'என் செலவிலேயே உடல்கள் அடக்கம் செய்யப்படும்'

'என் செலவிலேயே உடல்கள் அடக்கம் செய்யப்படும்'

1 mins read
edcd2c5e-5da1-4c61-8b16-4700475e55a1
-

கரூர்: கரூரில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா உள்பட எரியூட்டுவதற்கு கொண்டு வரப்படும் அனைத்து உடல் களுக்கும் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தான் முக்கிய காரணம் என்றும் அவரே உடல்களை எரியூட்டுவதற்கான முழு செலவையும் ஏற்றிருப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், "கரூர் மின் மயா னத்தில் அடக்கம் செய்ய, எரியூட்ட கட்டணம் கேட்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. காலை முதல் இரவு வரை அனைத்து உடல்களையும் இலவசமாக தகனம் செய்து அஸ்தியை உரியவர்களிடம் நகராட்சிப் பணி யாளர்கள் அளித்து வருகின்றனர்.

"உடலைக் கொண்டு வந்து எரியூட்டி, அஸ்தியை அளிப்பது வரையில் செலவுத் தொகை முழுவதையும் நான் ஏற்றுக் கொண்டுள்ளேன்," என்றார்.