கொரோனா நிதியில் ரூ.500 கேட்டவர் இடைநீக்கம்

கொரோனா நிதியில் ரூ.500 கேட்டவர் இடைநீக்கம்

1 mins read
57a20efd-3552-4668-bd42-7b93b15c23a5
-

திண்டுக்கல்: புதிய ரேசன் அட்டைகளை வழங்கும்போது 500 ரூபாயை எடுத்துக் கொண்டதாக புகார் கூறப் பட்டதை அடுத்து, உடனடி யாக அலுவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசால் தலா ரூ.2,000 ரேசன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் சரவணன் என்ப வர், இந்த ரூ.2,000ல் ரூ.500ஐ கமிஷனாகப் பெற்று புதிய ரேசன் அட்டை வழங்கிய தாகக் கூறப்படுகிறது.