தமிழகத்தில் குறையும் பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு

தமிழகத்தில் குறையும் பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு

1 mins read
9bedec3e-3f49-4220-848b-299814e37a99
-

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொேரானா கிருமிப் பரவல், இப்போது படிப்படி யாக நான்காவது நாளாகக் குறையத் தொடங்கி உள்ளது.

இருப்பினும், இத்தொற்றால் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 364 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே 15ஆம் தேதி ஒரே நாளில் 33,658 பேர் பாதிக்கப்பட்டனர். அன்று 303 பேர்தான் உயிரிழந்தனர்.

ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் இந்த பாதிப்பு 33,059 ஆகக் குறைந்துள்ளது. எனினும் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 364 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக, புறநகர் பகுதிகள், கிரா மங்கள் அதிகம் உள்ள கிருஷ்ணகிரி, கடலூர், நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

பொதுமுடக்கத்தை மதிக்காமல் அதிகளவில் மக்கள் கூடுவதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாததுமே சிறு நகரங்களில் தொற்றுப் பரவல் அதி கரிப்பதற்கு முக்கிய காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

நாள்தோறும் சுமார் 1.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், 30,000க்கும் மேலானோ ருக்கு தொற்று உறுதியாகிறது. தொற்றுள்ள ஒருவர் குறைந்தபட்சம் 10 பேரிடம் தொடர்புகொள்ளும் சூழ்நிலையில், பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கொரோனா தொற்று நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.