ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை 18-45 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி

சென்னை: தமி­ழ­கத்­தில் 18 முதல் 45 வயது உடையவர்க­ளுக்கு கொரோனா தடுப்­பூசி போடும் பணி இன்று முதல் தொடங்­கும் என்று மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இந்த வயதினரில் குறிப்­பாக, ஆட்டோ ஓட்­டு­நர்­கள், தொழி­லா­ளர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

கடந்த மார்ச் 1 முதல் 55 வய­துக்கு மேலா­ன­வர்­க­ளுக்­கும் ஏப்­ரல் 1 முதல் 45 வய­திற்கு மேலா­ன­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடும் பணி தொடர்ந்து வரு­கிறது.

இந்நிலையில், இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ேடாருக்கு இத் தடுப்­பூசி போடும் பணியை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் திருப்பூரில் தொடங்கி வைக்க உள்­ள­தா­க­ அமைச்சர் சொன்னார்.

சுகாதாரத்­ துறை சார்­பில் ரூ.46 கோடி செலவில், ஒன்­பது லட்­சம் தடுப்­பூ­சி­கள் தமி­ழ­கம் வந்து சேர்ந்­துள்­ள­தா­க­வும் அவர் மேலும் தெரிவித்தார்.

சென்னை தேனாம்­பேட்­டை­யில் கொரோனா பாதிப்­பால் மூச்சு விட சிர­மப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் நட­மா­டும் ஆக்­சி­ஜன் வாக­னங்­க­ளைத் தொடங்கி வைத்­த அமைச்சர், அதன்பின்னர் செய்தி யாளர்­க­ளி­டம் பேசினார்.

கொரோனா தொற்றைத் தடுக்க ஊர­டங்கு மட்­டுமே ஒரே தீர்­வாக உள்ளதாகக் கூறியவர், "ஊர­டங்கு நீடிக்­குமா என்­பது போகப் போகத்­தான் தெரி­யும்," என்றார்.

"ஊர­டங்­குக்கு முன்­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை வேக­மாக உயர்ந்­தது. ஆனால், ஊர­டங்­குக்குப் பிறகு தற்­போது பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 33,000 என்ற அள­விலேயே தொடர்­கிறது.

"சென்­னை­யில் இந்தப் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரு­கிறது.கொரோ­னா­வுக்கு சிகிச்சை அளிக்­கும் முறை­யில், சென்­னையைப் போலவே மற்ற மாவட்­டங்­க­ளி­லும் பின்­பற்றவேண்­டும் என்று அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளது.

"அதே­போல் ஊர­டங்கை இன்­னும் கடு­மை­யாகக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று மாவட்­டங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

"பொது­மக்­கள் அவ­சிய தேவை­க­ளுக்கு மட்­டுமே வெளியே வர­வேண்­டும். தேவை­யின்றி வெளியே சுற்­று­வதைத் தவிர்க்கவேண்­டும்.

ஊர­டங்கு கடு­மை­யா­க இருப்பி னும் அனை­வ­ரும் நலமாக வாழ இதை ஏற்­றுக்­கொள்ளத்தான் வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

ஊர­டங்கு கடு­மை­யாகவே

இருக்­கும். இது ஒரு கசப்பு மருந்துதான். வேறு வழியில்லை. அனை­வ­ரும் நலமாக வாழ இதை ஏற்­றுக்­கொண்டு பக்குவப்பட வேண்­டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!