இறையன்பு: இலவச சேவைக்கு லஞ்சம் பெற்றால் பணி நீக்கம்

இறையன்பு: இலவச சேவைக்கு லஞ்சம் பெற்றால் பணி நீக்கம்

2 mins read
276322e8-635b-4855-8205-175f09e42b93
-

சென்னை: கொரோனா கிருமிப் பர­வல் கார­ண­மாக மாநில மக்­கள் பெரும் அவ­திக்கு ஆளாகி வரும் இந்­தக் காலகட்­டத்­தில், நீதி நெறி­மு­றைக்­குப் புறம்­பாக நடந்­துகொள்­ளும் ஊழி­யா்­கள் பணி­நீக்கம் செய்யப்படுவார்கள் என தலை­மைச் செய­லாளா் வெ.இறையன்பு எச்­ச­ரித்­துள்ளாா்.

அர­சின் இல­வச சேவை­களை வழங்குவதற்குக் கூட பொது­மக்­க­ளி­டம் இருந்து கையூட்­டு பெறு­வது; மருத்­து­வ­ம­னை­களில் கூடு­தல் கட்­ட­ணம் வசூ­லிப்­பது, மருந்­து­களைக் கூடு­தல் விலைக்கு விற்­பது போன்ற மனித நேய­மற்ற செயல்­களில் ஈடு­ப­டு­வோர் மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் பாயும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்­டத்­திற்குப் புறம்­பாக நடந்து கொள்­ப­வர்­கள் குறித்து முதல்வரின் கவ­னத்­துக்கு புகார்கள் வந்­துள்­ள­தா­க­வும் அத்­த­கையோர் மீது கடும் நட­வ­டிக்கைகளை எடுக்கும்படி முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ள­தா­க­வும் தலை­மைச் செய­லா­ளர் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் கூறப்பட்­டுள்­ளது.

தவறு செய்­யும் அலு­வ­லர்­க­ளைத் தயங்காமல் பணி­நீக்­கம் செய்­ய­வும் அவர்­கள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்கைகளை எடுக்­க­வும் சம்­பந்­தப்­பட்ட அர­சுத் ­துறை செய­லர்­கள், காவல்துறை­யின் லஞ்ச ஒழிப்­புத் துறை அதிகாரிகளுக்கும் உத்­த­ர­விடப்பட்­டுள்­ள­து.

"எந்­த­ நி­லை­யில் ஓர் அலுவலர் இருந்­தா­லும் அல்­லது எந்த ஒரு நிறு­வ­ன­மாக இருந்­தா­லும் புகாா்கள் தொடர்பில் கடும் நட­வ­டிக்கைகளை எடுக்கவும் தவறு நடக்கும் இடங்­களில் கண்­கா­ணிப்பை தீவி­ரப்­படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"கிருமிப் பரவலைக் கட்­டுப்­படுத்த நமது மாநி­லத்­தில் பொது முடக்­கம் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஒரு­வ­ரி­டம் இருந்து மற்­றொ­ருவ­ருக்குப் பர­வா­மல் தடுத்­தல், தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வா்­க­ளைக் காத்­தல் ஆகிய இரண்டு முக்­கிய இலக்குகளோடு அரசு செயல்­பட்டு வருகிறது.

"மக்­க­ளின் உயிா் காக்­கும் பணி­யில் முழு முனைப்­போடு ஈடு­பட்டு வரும் அர­சுக்கு, தவறு செய்­யும் ஒரு சில­ரால் அவப்­பெயா் ஏற்­ப­டா­மல் கவ­ன­மா­க­வும் கண்­ணி­ய­மா­க­வும் செயல்­பட வேண்­டும்," என்று வெ.இறை­யன்பு கேட்­டுக்கொண்­டுள்ளாா்.