'ஊரடங்கை கடுமைப்படுத்த ராணுவத்தை ஈடுபடுத்தலாம்'

'ஊரடங்கை கடுமைப்படுத்த ராணுவத்தை ஈடுபடுத்தலாம்'

1 mins read
aa87f9e2-a1cd-4a6b-b129-a87adca5d354
-

சென்னை: ஊர­டங்கை கடு­மைப் படுத்­த­வும் வாக­னப் போக்­கு­வ­ரத்­தைத் தடுக்­க­வும் தமி­ழக சிறப்­புக் காவல்­படை, ஆயு­தப்­படை, ஊர்க்­காவல் படை ஆகி­ய­வற்றை சாலை­களில் நிறுத்­த­வேண்­டும். தேவைப்­பட்­டால், தமி­ழ­கத்­திற்கு வரும்­படி மத்­திய துணை ராணு­வப் படை­யினருக்கும் அழைப்பு விடுக்­க­வேண்­டும் என்று பாமக நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"தமிழ்­நாட்­டில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை ஓர­ளவு குறைந்­தா­லும் உயி­ரி­ழப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. ஊர் சுற்­று­வோ­ரைக் கட்­டுப் ­ப­டுத்த அர­சும் காவல்­து­றை­யும் நட­வ­டிக்கை எடுக்­கா­தது கண்­டிக்­கத்­தக்­கது. மக்­க­ளைக் காக்­க­வேண்­டிய பெரும் கடமை அர­சுக்கு உள்­ளது. அதற்கு சில கடு­மை­யான நட­வ­டிக்கைகளைத் துணிந்து எடுத்­து­தான் ஆகவேண்­டும்," என்று ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.