சென்னை: தமிழக முதல்வராக இம்மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தைத் தொடக்கி வைத்து இதற்கென ஓர் ஐஏஎஸ் அதிகாரியையும் நியமனம் செய்தார். கடந்த 9ஆம் தேதி 4 லட்சம் மனுக்கள் சிறப்பு அதிகாரியிடம் ஒப்ப டைக்கப்பட்ட நிலையில், இதில் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 549 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்களில் சிலருக்கு முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை உள்ளிட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இம்மனுக்கள் அனைத்தும் மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் குறுந் தகவல் அனுப்பப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த மனுக்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

