திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர்களைப் போலிசார் தடுத்து நிறுத்தி விசாரிக்கின்றனர். திருநெல்வேலியில் கிருமி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் பலரும் தேவையின்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதுபோல் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் ஐந்து திருக்குறள்களை எழுதும்படி ேபாலிசார் நூதனத் தண்டனை வழங்கினர். அதன்படி, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த குறள்களைக் காகிதத்தில் எழுதிக் காண்பித்த பின்னரே அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். திருக்குறள் தெரியாதவர்கள், தங்கள் கைபேசியில் திருக்குறளைத் தேடிக் கண்டுபிடித்து மனப்பாடம் செய்து எழுதிக் கொடுத்தனர். படம்: ஊடகம்
வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் எழுதும்படி தண்டனை
1 mins read
-

