சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அதன் பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகி உள்ளார்.
கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தம்முடன் 200 கிளைச் செயலாளர்கள், 2,200 கிளை செயற்குழு உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் என்றும் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இக்கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளரான சி.கே.குமரவேலும் தாம் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

