தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய கொரோனா தொற்று சிகிச்சை மையங்கள் திறப்பு

2 mins read
d8a8c950-a73f-45e0-b976-58dc5dec979a
-

மதுரை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரும் நிலை­யில் நேற்று மதுரை, திருச்சி ஆகிய இடங்­க­ளுக்­குச் சென்று கொரோனா பர­வல் தடுப்பு, நிவா­ரண நட­வ­டிக்­கை­கள் பற்றி நேர­டி­யாக ஆய்வு செய்­தார் தமி­ழக முதல்­வர்

மு.க. ஸ்டா­லின்.

நேற்று மதுரை தோப்­பூ­ரில் 500 ஆக்­சி­ஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா தொற்று சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்­தார். நேற்று காலை விமா­னம் மூலம் மது­ரைக்­குச் சென்ற திரு ஸ்டா­லின், கொரோனா தொற்று தடுப்­புப் பணி­கள் தொடர்­பாக மது­ரை­யில் ஆட்­சி­யர் மற்­றும் அதி­கா­ரி­கள் கலந்துகொண்ட கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.

அத­னை­ய­டுத்து, காலை 10.50 மணிக்கு தோப்­பூ­ருக்­குச் சென்ற முதல்­வர், அங்­குள்ள காச­நோய் மருத்­து­வ­மனை வளா­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள அந்த கொரோனா தொற்று சிகிச்சை மையத்­தைத் திறந்து வைத்து அத­னைப் பார்­வை­யிட்­டார். அவ­ருக்கு அந்த சிகிச்சை மையம் குறித்து அதி­கா­ரி­க­ளால் விளக்­கம் அளிக்­கப்­பட்­டது.

முதல்­கட்­ட­மாக, 230 ஆக்­சி­ஜன் படுக்­கை­கள் மட்­டுமே உட­ன­டி­யாக செயல்­பாட்டுக்கு வந்­தது என்­றும், எஞ்­சிய படுக்­கை­கள் ஓரிரு நாளில் பயன்­பாட்­டுக்கு வரும் என­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மது­ரைக்­குச் செல்­லும் முதல்­வர் அவ­ரது சகோ­த­ரர் அழ­கி­ரி­யைச் சந்­திக்­கக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் அவர், சிகிச்சை மைய திறப்­புக்­குப் பிறகு திருச்­சிக்கு காரில் புறப்­பட்­டுச் சென்­றார். இது அர­சு­மு­றைப் பய­ணம் என்­ப­தால் வேறு யாரை­யும் சந்­திக்­கப்­போ­வ­தில்லை என முன்பே முதல்­வர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சேலம், திருப்­பூர், கோயம்­புத்­தூர் நக­ரங்­களை நேற்று முன்­தி­னம் பார்­வை­யிட்ட முதல்­வர் ஸ்டா­லின், கோய­முத்­தூ­ரில் சித்த மருத்­துவ கொரோனா சிகிச்சை மருத்­து­வ­

ம­னை­யைத் திறந்து வைத்­தார்.

சர­வ­ணம்­பட்டி பகு­தி­யில் உள்ள கும­ர­குரு கல்­லூ­ரி­யில் கூடு­த­லாக 473 படுக்கை வச­தி­க­ளோடு அந்த சிகிச்சை மையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வளா­கத்­தில் ஏற்­கெனவே இரண்டு கொரோனா சிகிச்சை மையங்­கள் இயங்கி வரு­வது குறிப்பிடத்தக்கது.