கே. எஸ். அழகிரி: எழுவர் விடுதலை கோரும் முதல்வரின் கடிதத்தில் உடன்பாடு இல்லை'

கே. எஸ். அழகிரி: எழுவர் விடுதலை கோரும் முதல்வரின் கடிதத்தில் உடன்பாடு இல்லை'

2 mins read
e86eece2-b2de-4def-bf06-9e7ea73b71c1
-

சென்னை: இந்­தி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்தி கொலை வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்ட ஏழு பேரும் கடந்த 30 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிறை­யில் உள்ள நிலை­யில், அவர்­களை விடு­விக்­கக்­கோரி அதி­ப­ருக்கு தமி­ழக முதல்­வர் ஸ்டா­லின் கடி­தம் எழு­தி­யுள்­ள­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கின.

அம­ரர் ராஜீவ் காந்­தி­யின் நினைவு நாளான நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய காங்­கி­ரஸ் கட்­சி­யின் தமி­ழ­கத் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி எழு­வ­ரின் விடு­தலை தொடர்­பில் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நாட்­டின் அதி

­ப­ருக்கு எழு­திய கடி­தத்­தில் உடன்­பாடு இல்லை எனக் கூறியுள்ளார்.

மொழி, சம­யம், சாதி, இனம் ஆகி­ய­வற்­றின் பெய­ரால் பாகு­பாடு பார்த்து, தமி­ழர்­கள் என்ற முறை­யில் இந்த 7 பேருக்கு மட்­டும் விடு­தலை கோரு­வ­தில் உடன்­பாடு இல்லை என்று குறிப்­பிட்ட அவர், "தமி­ழ­கத்­தில் 100க்கு மேற்­பட்­டோர் 25 ஆண்­டு­க­ளுக்­கு மேலாக சிறைச்­சா­லை­களில் தண்­டனை அனு

­ப­வித்து வரு­கின்­ற­னர். அவர்­கள் அனை­வ­ருக்­கும் விடு­தலை கோரி­னால் அது மனி­தா­பி­மா­னம். ஆனால், இந்த 7 பேருக்கு மட்­டும் விடு­தலை கோரு­வ­தில் நியா­ய­மில்லை," என்று கூறி­யுள்­ளார். ஒரு­வ­ருக்கு தண்­டனை அளிப்­பது குறித்து நீதி­மன்­றம்­தான் முடி­

வெ­டுக்க வேண்­டும், அர­சி­யல் அழுத்­தங்­கள் கூடாது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, இந்த எழு­வ­ரை­யும் விடு­தலை செய்ய தமி­ழக

அர­சுக்கு முழு அதி­கா­ரம் உண்டு என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி. வீர­மணி வலி­யு­றுத்தி உள்­ளார்.இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டப் பிரிவு 161ன்கீழ் மாநில அரசு மீண்­டும் முடி­வெ­டுத்து அவர்­களை விடு­தலை செய்ய வேண்­டும் என­வும் அவர் கோரி­யுள்­ளார்.