'மக்கள் மருத்துவர்' கொரோனா தொற்றுக்கு பலியானார்

'மக்கள் மருத்துவர்' கொரோனா தொற்றுக்கு பலியானார்

1 mins read
533e11f0-484f-49ed-8a0f-3957c785278d
-

சென்னை: வட­சென்னை பகு­தி­யில் ஏழை எளிய மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக மருத்­து­வம் பார்த்து வந்த டாக்­டர் பார்த்­த­சா­ரதி, 84 (படம்), கொரோனா கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழந்­தார்.

சென்னை பழைய வண்­ணா­ரப்­பேட்­டை­யைச் சேர்ந்த மருத்­து­வர் பார்த்­த­சா­ரதி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்­து­வ­ம­னை­யில் மருத்­து­வ­ராகப் பணி­யாற்றி ஓய்வு பெற்­ற­வர். பின்­னர், தமது இல்­லத்­தி­லேயே சிறிய அள­வி­லான மருத்­து­வ­மனை அமைத்து, ஆரம்ப காலக்­கட்­டத்­தில் 60 பைசா கட்­ட­ணத்­தில் இருந்து மக்­க­ளுக்கு மருத்­து­வம் பார்க்­கத் தொடங்கி, கால மாற்­றத்­திற்கு ஏற்ப சொற்ப அள­வி­லான கட்­ட­ணத்­தி­லேயே மருத்­துவ சேவையை தொடர்ந்­தார். அவர் சிகிச்­சைக்­காக வாங்­கிய அதி­க­பட்ச கட்­ட­ணமே 50 ரூபாய்­தான் என்­கி­றார்­கள்.

அமெ­ரிக்கா, லண்­டன் நாடு­

க­ளுக்­குச் சென்று மருத்­து­வம் படித்த அவர், சுமார் 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக 4 தலை­முறை மக்­க­ளுக்கு சேவை புரிந்து வந்­தார். கிட்­டத்­தட்ட ஒரு வார­மாக கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு வீட்­டுத் தனி­மை­யில் இருந்த அவர் காவேரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார். அங்கு சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­தார். அவ­ரது உடலை வீட்­டிற்கு எடுத்­துச் சென்­ற­போது, அவ­ரி­டம் சிகிச்சை பெற்ற ஏரா­ள­மான பொது­மக்­கள் கூடி கதறி அழு­த­னர்.