பிறக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா அறிகுறி

பிறக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா அறிகுறி

1 mins read
1b13101a-0e63-4721-bf43-bbe7c4ae557f
-

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்­றின் முதல் அலை கால­கட்­டத்­தை­விட இரண்டாவது அலை சம­யத்­தில் பிறக்­கும் குழந்­தை­களில் பல­ருக்கு கிரு­மித்­தொற்று அறி­குறி இருப்­பதை மருத்­து­வர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

கடந்த சில நாட்­களில் 12 வயது வரை­யி­லான கிட்­டத்­தட்ட 1,300 குழந்­தை­க­ளுக்கு தொற்­றுப் பரி­சோ­தனை செய்­ததில், நோய்த் தொற்­றுள்ள தாய்­மார்­க­ளுக்­குப் பிறந்த குழந்­தை­களில் சில­ருக்கு தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருந்­தது தெரிய வந்­துள்­ளது. குழந்­தை­கள் கடு­மை­யான தொற்று பாதிப்­புக்கு ஆளா­கா­மல் இருப்­பது ஆறு­தல் அளிப்­ப­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ளனர். குழந்­தை­க­ளுக்கு 20% வரை அறி­கு­றி­கள் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

காய்ச்­சல் போன்ற அறி­கு­றி­கள் தென்­பட்­டால், கர்ப்­பி­ணி­கள் உட­ன­டி­யாக அது குறித்து மருத்­து­வ­ரி­டம் தெரி­விக்க வேண்­டும் என­வும் அதன் மூலம், அவர்­

க­ளுக்­குப் பிறக்­கும் குழந்­தை

­க­ளுக்­குத் தொற்று ஏற்­படும் அபா­யம் பற்றி முன்­கூட்­டியே அறிய முடி­யும் என்­றும் மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கொரோனா தொற்று முதல் அலை கால­கட்­டத்­தில் பிறந்த குழந்­தை­க­ளுக்கு கொரோனா தொற்று அறி­கு­றி­கள் ஏதும் இல்லை என்று கூறப்­பட்­டது.

ஆனால், கடந்த சில நாட்­களில் பிறந்த பல குழந்­தை­கள் தொற்று கர­ர­ண­மாக மருத்­து­வ­

ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொரோனா தொற்­று­டன் நிமோ­னியா தாக்­கிய குழந்­தைக்கு செயற்கை சுவா­சக் கரு­வி­யின் உத­வி­யு­டன் சிகிச்சை அளித்­த­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

காய்ச்­சல், சோர்வு, வாந்தி போன்ற அறி­கு­றி­க­ளு­டன் குழந்­தை­கள் இருந்­தால், உடனே மருத்­து­வர்­களை அணுக வேண்­டும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.