காரணமின்றி சுற்றித் திரிந்தவர்களை தோப்புக்கரணம் போடவைத்த போலிசார்

காரணமின்றி சுற்றித் திரிந்தவர்களை தோப்புக்கரணம் போடவைத்த போலிசார்

1 mins read
64cc816a-bd41-425e-bab1-b9366c5ab908
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில், காலை 10 மணிக்குப் பிறகு ஆரணி நகரில் கார­ண­மின்றி வாக­னங்­களில் சுற்றித் திரிந்த இளை­யர்­களை மடக்­கிய போலி­சார், அவர்­க­ளைத் தோப்­புக்­க­ர­ணம் போட­வைத்து, உறு­தி­மொ­ழி­யும் எடுக்க செய்­த­னர். படம்: தமி­ழக ஊட­கம் -

கொரோனா தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தமி­ழக அரசு ஊர­டங்கை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆயி­னும், அத்­தி­யா­வ­சி­யத் தேவை­களை மக்­கள் நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்­காக மளிகை, காய்­க­றிக் கடை­களை காலை 6 முதல் 10 மணி வரை மட்­டும் திறக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

காலை 10 மணிக்­குப் பிற­கும் மக்­கள் வெளி­யில் நட­மா­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னைத் தடுக்க போலி­சார் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வரு­கி்­ன்­ற­னர். இ-பதிவு இல்­லா­மல் வாக­னங்­களில் செல்­வோர் மீது போலி­சார் வழக்கு பதிவு செய்து வரு­கின்­ற­னர். ஆர­ணி­யில் கட்­டுப்­

பா­டு­களை மீறி திறந்­தி­ருந்த 15 கடை­கள், நிறு­வ­னங்­களை மூடி வரு­வாய்த் துறை அதி­கா­ரி­கள் 'சீல்' வைத்­த­னர்.