சென்னை: மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் இரு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தபோது விரும்பத்தகாத வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவரது உடல்நிலை தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓரிரு நாள்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனைகள், சிகிச்சை முடிந்தபின் நேற்று முன்தினம் இரவு அவர் வீடு திரும்பிய செய்தியறிந்து அவரது ரசிகர்கள், தொண்டர்கள் ஆறுதல் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

