சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நேற்று காற்றுடன்
கூடிய மழை பெய்தது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், போரூர், ஆலந்தூர், அடையாறு, தரமணி, ராமாபுரம், வண்டலூர், தாம்பரம், பெருங்குளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்தது. சென்னையில் கருமேகங்கள் காணப்பட்டன.
நேற்று முன்தினமும் நகரின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்தது.

