தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

2 mins read
0746099f-88c5-4415-aba7-4bafce643d58
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்ந்து அதி­

க­ரித்து வரு­வ­தால் தளர்­வு­க­ளற்ற முழு ஊர­டங்கு விதிக்­கப்­ப­டு­கிறது.

தற்­போது நடப்­பில் இருக்­கும் தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு 24ஆம் தேதி­யு­டன் முடி­வுக்கு வர­வுள்ள நிலை­யில், அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை குறித்து முடிவு எடுப்­ப­தற்­காக சுகா­தா­ரத்­துறை உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளு­ட­னும் கொரோனா பர­வ­லைத் தடுப்­ப­தற்கு ஆலோ­சனை வழங்க அமைக்­கப்­பட்ட அனைத்­துக்­கட்சி உறுப்­பி­னர்­

க­ளைக் கொண்ட குழு­வு­ட­னும் முதல்­வர் ஸ்டா­லின் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

மருத்­துவ நிபு­ணர்­க­ளு­டன் நடத்­தப்­பட்ட கூட்­டத்­தில் கடும் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் ஊர­டங்கை நீட்­டிக்க பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

ஊர­டங்கை நீட்­டிக்க அனைத்­துக் கட்சி ஆலோ­ச­னைக் குழு­வும் ஆத­ரவு தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து, நாளை முதல் ஒரு வாரத்­துக்கு தளர்­வு­கள் இல்­லாத முழு ஊர­டங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மக்­கள் அவ­ச­ரப்­

ப­டா­மல் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்க ஏது­வாக நேற்­றும் இன்­றும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை­கள் திறக்க அனு­

ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இது தவிர, ஊர­டங்கு காலத்­தில் பால், குடி­நீர், நாளேடுகள் போன்­ற­வற்றை விநி­யோ­கிக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

மருந்­த­கங்­கள், நாட்டு மருந்­துக் கடை­கள், கால்­நடை மருந்­த­கங்­கள் போன்­றவை முழு ஊர­டங்கு காலத்­தி­லும் செயல்­படும்.

உள்­ளாட்சி அமைப்­பு­க­ளு­டன் இணைந்து வாக­னங்­கள் மூலம் வீடு­க­ளுக்கே வந்து காய்­க­றி­கள் விற்­பனை செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெளி­யூர் செல்­லும் பய­ணி­

க­ளின் நலன் கருதி இன்று வரை இரு நாள்­க­ளுக்கு அரசு, தனி­யார் பேருந்­து­கள் செயல்­ப­ட­வும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

பெட்­ரோல் நிலை­யங்­கள் வழக்­கம்போல் இயங்­க­லாம்.

உரிய மருத்­துவ கார­ணங்­கள், இறப்­பு­க­ளுக்கு மட்­டும் மாவட்­டம் விட்டு மாவட்­டம் செல்ல இ-பதி­வு ­டன் அனு­மதி வழங்­கப்­படும்.

உண­வ­கங்­களில் அமர்ந்து உண­வ­ருந்த அனு­மதி இல்லை. கடை­க­ளி­லி­ருந்து வாங்­கிச் செல்ல அனு­மதி உண்டு.

தலை­மைச் செய­ல­கத்­தி­லும் மாவட்­டங்­க­ளி­லும் அத்­தி­யா­

வ­சி­யத் துறை­கள் மட்­டும் இயங்­கும். தனி­யார் நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்­றின் ஊழி­யர்­கள் வீட்­டி­லி­ருந்­த­படி பணி­பு­ரிய அனு­மதி உண்டு.

தமி­ழ­கத்­தில் நேற்று முன்

தினம் ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று பதி­வா­னது, மேலும் 467 பேர் உயி­ரி­ழந்­த­னர். தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடை­மு­றைப்படுத்­தப்­படும் ஊர­டங்கு கால­கட்­டத்­தில் பொது­மக்­கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.