சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று இரண்டாவது அலை காலகட்டத்தில் கிராமப்
புறங்களிலும் ஏராளமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருப்ப
தாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கொரோனா தொற்று முதல் அலை காலத்தில் கிராமப்புறங்களில் குறைந்த அளவிலான பாதிப்புகள் பதிவான சூழலில், இம்முறை கிராமங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 30 விழுக்காடாக அதி
கரித்துள்ளது. நகரங்களில் இருப்பது போன்று பெரிய மருத்துவ
மனைகள், சிகிச்சை வசதிகள் இன்றி கிராமப்புற மக்கள் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலையில், நகரப் பகுதிகளுக்கு மக்கள் வந்து செல்
வதால் தொற்று பரவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் தொற்று பரவி வருவதையடுத்து, ஏராள
மானோர் காய்ச்சல், சளி, உடல்
வலியால் அவதியுறுவதாகவும் உடனடியாக கிராமங்களில் சுகாதார முகாம் அமைத்து சோதனை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
திருமணம் போன்ற நிகழ்வுகளில் கூட்டம் கூடுவதாலும் முகக்
கவசத்தை பலர் தவிர்ப்பதுமே கிராமப் புறங்களில் கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

