ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: இறந்தவர்களுக்கு மூன்றாமாண்டு அஞ்சலி

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: இறந்தவர்களுக்கு மூன்றாமாண்டு அஞ்சலி

1 mins read
34667c6f-e89f-4aa9-b5a5-d39e2b5f05fd
-

தூத்துக்குடி: தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரான போராட்­டத்­தின்­போது துப்­பாக்­கிச்­சூட்­டில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மூன்­றா­மாண்டு நினைவு தினம் நேற்று அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்­துக்­கு­டி­யில் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக போரா­டிய பொது­மக்­கள் மீது காவல்­து­றை­யி­னர் துப்­பாக்­கிச்சூடு நடத்­தி­ய­தில் 13 பேர் உயி­ரி­ழந்­த­னர், பலர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

தூத்­துக்­கு­டி­யின் பல பகு­தி­களில் உயி­ரி­ழந்­தோ­ரின் புகைப்­

ப­டங்­க­ளுக்கு மலர்­தூ­வி­யும் மெழு­கு­வர்த்தி ஏந்­தி­யும் தூத்­துக்­குடி மாவட்ட பொது­மக்­கள் கண்­ணீர் அஞ்­சலி செலுத்­தி­னர்.

இத­னி­டையே, ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக போரா­டி­ய­வர்­கள் மீதான வழக்­கு­களை வாபஸ் பெறு­வ­தாக தமி­ழக அரசு நேற்று முன்­தி­னம் அறி­வித்­த­தற்கு, பொது­மக்­கள் வர­வேற்பு தெரி­வித்­துள்­ள­னர். படம்: தமிழக ஊடகம்