முழு ஊரடங்கு அச்சத்தில் சந்தைகளில் குவிந்த பொதுமக்கள்

முழு ஊரடங்கு அச்சத்தில் சந்தைகளில் குவிந்த பொதுமக்கள்

1 mins read
56b7754a-f0ab-4f57-b3c3-ecdc03a3103b
-

திருச்சி: தமி­ழ­கத்­தில் தளர்­வு­கள் அற்ற ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்ற அச்­சம் கார­ண­மாக, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­கு­வ­தற்­காக சந்­தை­களில் மக்­கள் அதிக அள­வில் நேற்று திரண்­ட­னர்.

இம்­மா­தம் 10 முதல் 24ஆம் தேதி வரை பொது ஊர­டங்கு நடப்­பில் உள்­ளது. ஆனா­லும், அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை மக்­கள் வாங்­கு­வ­தற்­காக காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடை­கள் செயல்­பட அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தளர்­வு­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு கார­ண­மா­கவே கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தா­கப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் குற்­றம்­சாட்டி வரு­கின்­ற­னர்.

இநிலை­யில், நேற்று முன்­தி­னம் திருச்­சிக்கு சென்ற முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அனைத்­துக் கட்­சிக் கூட்­டம், மருத்­துவ வல்­லு­நர்­கள் ஆகி­யோ­ரு­டன் ஆலோ­சனை நடத்தி, உரிய முடிவு அறி­விக்­கப்­படும் என்று அறி­வித்­தார்.

இத­னால் திருச்சி மக்­கள் நேற்று காலை சந்­தை­களில் திரண்­ட­னர். அங்கு முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளி­க­ளைக் கடை­பி­டிப்­பது போன்­ற­வற்றை வலி­யு­றுத்­து­வ­தற்­காக மாந­க­ராட்சி ஊழி­யர்­களும் போலி­சா­ரும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.