சென்னை: இன்று முதல் ஊரடங்கு தொடர்வதால், நேற்று தேவையான பொருள்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் காய்கறி, மளிகைக் கடைகளில் அலைமோதியது.
இச்சமயத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், காய்கறி களின் விலை இரட்டிப்பாக விற்கப்பட்டன. பொதுமக்கள் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிடும் வகையில், பொருள்களை வாங்குவதில் மும்முரம் காட்டினர். இதனால், தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயமும் தென்பட்டது.
இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சில வணிக நிறுவனங்களும் வியாபாரிகளும் காய்கறிகளின் விலையைத் தாறுமாறாக கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதுபோல் விலை உயர்த்தி விற்பனை செய்வது மக்களைச் சுரண்டும் செயலாகும். எனவே, வழக்க மான விலைக்கு குறைக்க வணிகர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று வலியுறுத்தி இருந்தார்.
சென்னை: மக்கள் மத்தியில் இருந்து கொரோனா கிருமிப் பரவல் சங்கிலியை உடைக்கவே தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் மக்க ளுக்குத் தேவையான அத்தியா வசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஊரடங்கு தருணத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொய்வின்றி நடக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில், தளர்வற்ற முழு ஊரடங்கு இன்றுமுதல் ஒரு வாரத்துக்கு நடப்புக்கு வருகிறது.
இந்த ஊரடங்கை அமல்படுத்து வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி வழி நேற்று ஆலோசித்தார்.
அப்போது பேசிய அவர், "கொரோனா நிவாரணத் தொகை பயனாளிகளுக்கு முறைப்படி சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்யவேண்டும். மக்களுக்குத் தேவையான பால், குடிநீர் போன்ற இன்றியமையாத பொருள்கள் சீராகக் கிடைக்க ஆட்சியர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண் டும்," என்று கேட்டுக்கொண்டார்.
"முழு ஊரடங்கின்போது விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப் படுவதை உறுதி செய்யவேண்டும். ெகாரோனா மேலும் பரவாமல் தடுப் பதற்கு அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் அந்தச் சங்கிலியை உடைக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன்தான் இந்த ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது என மக்களிடம் மாவட்ட ஆட்சியர்கள் விளக்க வேண்டும்.
"சென்னை, கோவை மாவட்ட மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்து அதிகளவில் விழிப்புணர்வு உள்ளதாகவும் திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மக்களில் 5% மட்டுமே தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளனர்," என்றும் முதல்வர் சொன்னார்.

