'பசியாக இருந்தால் எடுத்துச் சாப்பிடுங்கள்' பழம், உணவு மக்களுக்கு இலவச விநியோகம்

'பசியாக இருந்தால் எடுத்துச் சாப்பிடுங்கள்' பழம், உணவு மக்களுக்கு இலவச விநியோகம்

1 mins read
daa5c463-7278-463d-9e62-b92dad448869
பூட்டிய கடை முன்பு தொங்கவிடப்பட்டுள்ள வாழைப்பழத்தை பசியுடன் வருவோர் எடுத்துச் சாப்பிடுகின்றனர். படம்: ஊடகம் -

தூத்­துக்­குடி: கொேரானா ஊர­டங்கு கார­ண­மாக ஏழை, எளி­யோர், ஆத­ர­வற்ற மக்­க­ள், சாலை யோரங்களில் திரிபவர்கள் என பலரும் உணவு கிைடக்காமல் அவ­திக்குள்ளாகி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகை­யில், கோவில்­பட்­டி­யைச் சேர்ந்த முத்­துப்பாண்டி என்ற பழக்க­டைக்­கா­ரர் வாழைப்­ப­ழங்களை இல­வ­ச­மாக வழங்கி மக்­க­ளின் பசிப்­பிணி போக்கி வரு­கி­றார்.

தூத்­துக்­குடி மாவட்­டம், கோவில் பட்­டி­யில் உள்ள கட­லை­யூரில் பழக்­கடை வைத்­தி­ருக்­கும் முத்­துப்­பாண்டி, பூட்­டிக் கிடக்­கும் தனது கடை­யின் முன்பு தின­மும் ஐந்து வாழைத்தார்­க­ளைத் தொங்க விட்டு, "பசி எடுத்­தால் எடுத்­துச் சாப்­பி­டுங்­கள், பழம் இல­வ­சம். ஆனால், வீணாக்கவேண்­டாம்," என்ற வாச­கத்­தை­யும் கரும்பலகை யில் எழுதி வைத்­துள்­ளார்.

முகம் தெரி­யாத பழக்கடைக்­கா­ர­ரின் மனித நேயத்­தை மக்கள் பாராட்­டிச் செல்­கின்­ற­னர்.

இதேவழி­யில், "பசித்­தால் நீங்­களே எடுத்­துக்கொள்­ளுங்­கள்," என தள்­ளு­வண்­டி­யில் உண­வுப் பொட்­ட­லத்துடன் விளம்­ப­ரப் பதா­கை­யும் வைத்து ஏழை­க­ளின் பசியை பேரா­வூ­ர­ணி இளை­ஞர்­கள் சில­ரும் போக்கி வரு­கின்­ற­னர்.

கார்த்­தி­கே­யன், நிமல், பிர­பா­க­ரன், ரமேஷ் ஆகிய இளை­ஞர்­கள் கூறு­கை­யில், "பொது ஊர­டங்­கால் பாதிக்­கப்­பட்ட ஆத­ர­வற்­றோர், கூலி வேலை செய்ேவார், முதி­ய­வர்­கள் பயன்­பெறும் வகை­யில் தின­மும் 100 பேருக்கு சுகா­தா­ர­மான முறை­யில் தயா­ரிக்­கப்­பட்ட உண­வு­களை தள்ளுவண்டியில் வைத்து வழங்கி வருகிறோம். பசியுள்ளோர் உணவுப் பொட்­ட­லத்தை எடுத்துக்கொள்­ள­லாம்," என்­கின்றனர்.