அமைச்சர்: கொரோனா சிகிச்சைக்கு 10,000 பேரை நியமிக்க திட்டம்

அமைச்சர்: கொரோனா சிகிச்சைக்கு 10,000 பேரை நியமிக்க திட்டம்

2 mins read
468c563e-6982-46d1-9118-36bb24d036c3
-

சென்னை: தமிழகத்தில் கொரோனா பெருந்­தொற்­றின் இரண்­டா­வது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பதற்காக ­ மருத்துவா்கள், தாதியா்கள், தொழில்நுட்பப் பணி யாளா்கள் என 10,000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கூடுத லாக அமைக்கப்பட்டுள்ள 136 படுக்கை வசதிகள் கொண்ட 'ஜீரோ' டிலே வாா்டை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசினார்.

அவசர சிகிச்சை வாகனத்தில் வரும் கொரோனா நோயாளிகள் ஒரு நிமிட நேரம் கூட தாமதம் ஏற்படாமல் உடனடியாக பூஜ்ய தாமத (ஜீரோ டிலே) வாா்டில் சோ்க்கப்படுகின்றனா்.

ஆக்சிஜன் படுக்கை காலி யாகும்போது பேட்டரி காா்கள் மூலம் நோயாளிகள் தங்களின் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஏற்ப வாா்டுகளில் சோ்க்கப்படுகின்றனா்.

சென்னை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனா்.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவா் மூலம் ஏறக்குறைய 400 பேருக்கு இத்தொற்று பரவுகிறது. அதனால், கொரோனா நோயாளிகளுடன் உறவினா்கள் எவரும் அனுமதிக்கப் படுவதில்லை.

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதி களையும் மருத்துவமனை நிா்வா கம் செய்துதர வேண்டும்.

தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 2,000 மருத்துவா்கள், 6,000 தாதியா்கள், 2,000 தொழில்நுட்பப் பணியாளர் களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவமனை களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை," என்றாா் அவா்.