கறி விருந்தில் பங்கேற்ற 17 பேருக்கு கிருமி பாதிப்பு

கறி விருந்தில் பங்கேற்ற 17 பேருக்கு கிருமி பாதிப்பு

1 mins read
ab124df9-e7b5-465d-96dd-421448f43fb4
-

தஞ்சாவூர்: புதுமணத் தம்பதி களுக்கு நடத்தப்பட்ட கறி விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட புது மாப்பிள்ளை உள்ளிட்ட 17 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோத னையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரும் கும்ப கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வருவ தைத் ெதாடர்ந்து, தினசரி தொற்று பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ெதாடர்ந்து அதிகரித்து வரு கின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ராஜா என்பவரின் திருமணம் கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது.

இதைத்ெதாடர்ந்து, கடந்த 17ஆம் தேதி கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த னர். இதில் கலந்துகொண்ட பலரும் அடுத்தடுத்த நாள்களில் காய்ச்சல், இருமலுடன் உடல் நோய்வாய்ப்பட அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மாப்பிள்ளை ராஜா உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.