திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் ஜெயசீலனும் அவருைடய மனைவியும் ஒரே வாரத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதனால், அவரது மூன்று பிள்ளைகளும் ஆதரவற்றவர்களான நிலையில், இவர்களின் எதிர்கால நலனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
கலிஃபோர்னியாவில் உள்ள கணினி நிறுவனம் ஒன்றில் மறைந்த ஜெயசீலனின் உறவினர் குமார் ராஜா பணியாற்றி வருகிறார்.
இவர், அமெரிக்காவில் உள்ள நண்பர்களிடம் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதை அடுத்து, நண்பர்களாகச் சேர்ந்து 50,000 டாலர்கள் என்ற இலக்குடன் நிதி திரட்டும் முயற்சியை முன்னெ டுத்துள்ளனர். பெற்றோர்களை இழந்து வாடும் பிள்ளைகளின் நல னுக்காக பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.